×

மாவட்டத்தில் 30 நாட்களுக்கு ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

தர்மபுரி, செப்.30: தர்மபுரி மாவட்டத்தில் 30 நாட்களுக்கு ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கால்நடைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ், 2023-ம் ஆண்டில் தகுதியுள்ள 3 லட்சத்து 17 ஆயிரம் 700 வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கு, ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி, கடந்த 27ம்தேதி துவங்கியது. 30 நாட்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 4 மாதத்துக்கு மேற்பட்ட சினையற்ற வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு தடுப்பூசி போடப்படும். ஒவ்வொரு கிராமத்திலும், அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவர் தலைமையிலான குழுவினர் முகாமிட்டு, குறிப்பிட்ட நாளில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடுகின்றனர். எனவே, மாட்டத்தில் உள்ள விவசாயிகள், தங்களது சினையற்ற வெள்ளாடுகள், செம்மறியாடுகளை ஓட்டி வந்து, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post மாவட்டத்தில் 30 நாட்களுக்கு ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dinakaran ,
× RELATED தருமபுரி தனியார் பள்ளியில்...