×

மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விழிப்புணர்வு கருத்தரங்கம்: கலெக்டர் தலைமையில் நடந்தது

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் மற்றும் ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவனம் சார்பாக மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த  கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், சப் கலெக்டர் (பொ) கேத்ரின் சரண்யா, தமிழ்நாடு மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.சிம்மசந்திரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.அருள்ராஜ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆர்.சேகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் க.விஜயா, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) ச.சுதா, மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.சுமதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் பி.ஸ்டீபன் அனைவரையும் வரவேற்றார்.அப்போது, கலெக்டர் பேசியதாவது: எந்தவொரு தொழிலையும் செய்வதற்கு நம்மிடம் திறன் உள்ளது, செய்வதற்கான விருப்பமும் உள்ளது. அப்படியிருந்தாலும் அதனை ஊக்கப்படுத்துவதற்காகவும், தொழிலை மேம்படுத்துவதற்காகவும் துறையின் உறுதுணையும் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு அதிகாரிகளுடைய ஒருங்கிணைப்பும் இங்கு தேவைப்படுகிறது. அதற்காகத்தான் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாற்றுத்திறனாளிகளின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையிலான ஒரு கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இந்த கூட்டமானது கட்டாயமாக திருவள்ளுர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பெருமளவில் ஊக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று கூறினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான விற்பனை கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார். முன்னதாக திருவள்ளூர்  மாவட்டம், பட்டாபிராம் டிஆர்பிசிசிசி இந்து கல்லூரியில் வருகிற  18ம் தேதி  முதல் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்….

The post மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விழிப்புணர்வு கருத்தரங்கம்: கலெக்டர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tamil Nadu State Rural Livelihoods Movement ,IRCDS ,District Rural Development Agency ,
× RELATED திருவள்ளூரில் பெயிண்ட்...