×

மார்த்தாண்டம் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

மார்த்தாண்டம், ஆக. 1: மார்த்தாண்டம் அருகே பஸ்ஸில் இருந்து நிலை தடுமாறி விழுந்து தச்சு தொழிலாளி பலியானார். நட்டாலத்தைச் சேர்ந்தவர் குமரேசன்(53) தச்சு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் குமரேசன் மார்த்தாண்டத்திலிருந்து பஸ் ஏறி நட்டாலத்தில் இறங்கும்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை உடனே குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்ட குமரேசன் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று பலியானார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குமரேசனுக்கு கிரிஜா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

The post மார்த்தாண்டம் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Natalam ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டம் அருகே பைக் திருட்டு