×

மாரியம்மன் கோயில் கம்பம் விடுதல் நிகழ்ச்சி கரூர் காவல் நிலைய சரகத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்

 

கரூர், மே 28: கரூரில் மாரியம்மன் கோயில் கம்பம் விடுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளதால் கரூர் காவல் நிலைய சரகத்தில் இன்று ஒரு நாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்; வெங்கமேடு வழியாக வரும் பக்தர்களின் வாகனங்கள் ரத்தினம் சாலை வழியாக ரயில்வே நிலையம் அருகில் உள்ள பார்க்கிங் இடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு, பக்தர்கள் மட்டும் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ரயில் நிலையத்தில் இருந்து கோயில் செல்லும் வழியில் எவ்வித இரு சக்கர வாகனங்களும் அனுமதிக்கப்படாது. வாங்கல் மற்றும் பஞ்சமாதேவி வழியாக வரும் பக்தர்கள், வாகனங்களை பாலம்மாள்புரம் பெட்ரோல் பங்க் மற்றும் பாலம்மாள்புரம் கோயில் அருகே நிறுத்தம் செய்து விட்டு பக்தர்கள் மட்டும் ஐந்து ரோடு வழியாக கோயில் மற்றும் ஆற்றுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பாலம்மாள்புரத்தில் இருந்து எந்த வாகனமும் ஐந்து ரோடு செல்ல அனுமதிக்கப்படாது.

The post மாரியம்மன் கோயில் கம்பம் விடுதல் நிகழ்ச்சி கரூர் காவல் நிலைய சரகத்தில் இன்று போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Mariyamman Temple pole laying ,Karur police station ,Karur ,Karur Police Station Warehouse ,Mariamman Temple Pole ,laying ,Mariyamman Temple Pole-Raising ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...