×

மாமல்லபுரத்தில் கடல் கொந்தளிப்பால் சீற்றம் அதிகரிப்பு: பாதுகாப்பான இடத்தில் படகுகள்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நேற்றிரவு முதல் கடல் கொந்தளிப்பால் அலைகளின் சீற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லாமல், தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மாமல்லபுரத்தில் நேற்றிரவு முதல் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டு வருகிறது. மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார மீனவ குப்பம் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கடல் கொந்தளிப்பினால் அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மாமல்லபுரம் குப்பம், வெண்புருஷம், கொக்கிலமேடு குப்பம், புதிய கல்பாக்கம், புதுஎடையூர் குப்பம், பட்டிபுலம் குப்பம், நெம்மேலிகுப்பம், தெற்குபட்டு, திருவிடந்தை உள்ளிட்ட மீனவப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. சில மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்றுள்ளனர்.இன்று காலை 10 அடி உயரத்துக்கு ராட்சத அலை எழும்பி, கரையை நோக்கி வேகமாக வந்தன. மேலும், மாமல்லபுரம் கடற்கரையில் பலத்த காற்றுடன் வீசி வருகிறது. மாமல்லபுரம் நகரை பொறுத்தவரை சிறிது நேரம் வெயிலும், சிறிது நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த கடல் சீற்றத்தால் மீனவ குப்பங்களில் இருந்து கடலுக்கு செல்லாத பெரும்பாலான மீனவர்கள், தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பலத்த காற்றில் படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதமடையாமல் இருக்க, மீனவர்கள் படகுகளை கயிறு கட்டி கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்….

The post மாமல்லபுரத்தில் கடல் கொந்தளிப்பால் சீற்றம் அதிகரிப்பு: பாதுகாப்பான இடத்தில் படகுகள் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில் புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்