×

மாநில கலைப்போட்டிக்கு சென்ற மாணவர்கள்

 

தர்மபுரி, நவ.22: தர்மபுரி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், மாநில போட்டியில் பங்கேற்க பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில், கடந்த மாதம் பள்ளிக்கல்வித்துறை சார்பில், கலைத்திருவிழா நடந்தது. 6 முதல் 12ம் வகுப்பு வரையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு நடனம், இசை, பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். இதில் முதல் 2 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் மாநில அளவில் நடக்கும் கலைப்போட்டிகளில் பங்கேற்க, தர்மபுரியில் இருந்து பஸ் மூலம் புறப்பட்டு சென்றனர். 6 முதல் 8ம் வகுப்பு வரை 64 பேர் வேலூரில் நடக்கும் போட்டிக்கும், 9 முதல் 10ம் வகுப்பு வரை 182 பேர் செங்கல்பட்டில் நடக்கும் போட்டியிலும், பிளஸ்1 மற்றும் பிளஸ்2 பயிலும் 166 பேர் திருச்சியில் நடக்கும் போட்டிக்குமாக மொத்தம் 412 பேர் மாநில போட்டிக்கு புறப்பட்டு சென்றனர்.
இதையொட்டி தர்மபுரி அவ்வையார் அரசு பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளை மாநில போட்டிக்கு வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, கொடியசைத்து மாணவ, மாணவிகளை அனுப்பி வைத்தார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மான்விழி, இடைநிலைக்கல்வி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் விஜயகுமார், அரூர் மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில், பள்ளி துணை ஆய்வர் பிரபாவதி, உதவி திட்ட அலுவலர் சம்பத்குமார், நேர்முக உதவியாளர் பாரதி, பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வி, உதவி தலைமையாசிரியர் முருகன், ஒருங்கிணைப்பாளர் துரைராஜ், அருண்குமார், முனி அசோக்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் நேற்று 2வது நாளாக 3 பஸ்கள் மூலம் மாநில போட்டிக்கு 400 மாணவ, மாணவிகள் அவ்வையார் அரசு பள்ளியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

The post மாநில கலைப்போட்டிக்கு சென்ற மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது