×

மாநிலங்கள் இடையிலான பிரச்னைகளை தீர்க்கும் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமலுக்கு வந்தது: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் அணைகளை பாதுகாக்கவும், மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்குமான தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தை ஒன்றிய அரசு உருவாக்கி உள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, ‘அணை பாதுகாப்பு சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, மாநில அளவிலான அணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அணைகளின் உரிமையாளர்களாக உள்ள மாநில அரசுகளுடன் இணைந்து, இந்த அணை பாதுகாப்பு ஆணையம் சிக்கல்களை தீர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதன்படி, தற்போது தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தை ஒன்றிய அரசு நிறுவி உள்ளதாக ஜல் சக்தி அமைச்சகம் நேற்று அரசிதழ் வெளியிட்டது. இந்த ஆணையம் ஒன்றிய நீர் ஆணையத்தின் தலைவர் தலைமையில் 22 உறுப்பினர்களைக் கொண்ட தேசியக் குழுவை கொண்டிருக்கும். தலைநகர் டெல்லியில் இருந்து இயக்கும் இந்த ஆணையத்தின் கீழ் 4 பிராந்திய அலுவலகங்கள் அமைக்கப்படும். மாநிலங்களால் அமைக்கப்படும் மாநில அணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையேயும் அல்லது குறிப்பிட்ட அணையின் உரிமையாளராக இருக்கும் மாநில அரசுடன் மற்ற மாநிலத்திற்கு உள்ள பிரச்னையையும் தீர்த்து வைப்பதே இந்த ஆணையத்தின் முக்கிய செயல்பாடாகும்.இந்த அணை பாதுகாப்பு சட்டம் மாநில அரசுகளின் உரிமையை பறிப்பதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அணை தொடர்பாக விவகாரங்களில் ஒன்றிய அரசிடம் கை கட்டி நிற்க வைப்பதையே இந்த ஆணையம் வழிவகுக்கும் என பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.* முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கும், கேரளா அரசிற்கும் நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. மேகதாதுவில் கர்நாடகா அரசு புதிய அணை கட்டுவதையும் தமிழக அரசு எதிர்ப்பதால் பிரச்னைகள் நிலவுகிறது.* நாடு முழுவதும் தற்போது 5,264 பெரிய அணைகள் உள்ளன. 437 புதிய அணைகள் கட்டப்பட்டு வருகின்றன….

The post மாநிலங்கள் இடையிலான பிரச்னைகளை தீர்க்கும் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமலுக்கு வந்தது: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : National Dam Safety Commission ,Union Govt. ,New Delhi ,
× RELATED வேகமெடுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு:...