×

மாநகரில் இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்க முடிவு

 

கோவை, செப். 4: கோவை ஆர்.எஸ்.புரத்தில் இந்து முன்னணி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சம்பந்தமான கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தசரதன் தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் கோட்ட செயலாளர் பாபா கிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், மாநகரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கவும், திருவிளக்கு பூஜை, இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள், குழந்தைகளுக்கான கவிதை, பேச்சுப்போட்டிகள் போன்றவற்றை சிறப்பாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

வரும் 8-ம் தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும், 22-ம் தேதி நடைபெறும் விசர்ஜன ஊர்வலம் பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்க உள்ளார். ஒன்றிய இணைய அமைச்சர் எல்.முருகன் சிறப்புரை ஆற்றவுள்ளார். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்து முன்னணி சார்பாக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் பிளாஸ்ட் பேரிஸ் போன்ற வேதியியல் பொருட்களால் செய்யப்படுவதில்லை. இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் கிழங்கு மாவு மற்றும் வண்ணக் கலவைகளால் செய்யப்படுகிறது என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மாவட்ட செயலாளர்கள் ஆனந்த், ஆறுசா சாமி, மகேஸ்வரன் மாவட்டத் துணை தலைவர்கள் அருண் சங்கர், சோமசுந்தரம், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய டிவிசன், கிளை பொறுப்பாளர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post மாநகரில் இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Hindu Front ,Coimbatore ,Ganesha Chaturthi Festival ,District ,RS Puram ,
× RELATED நீட் தேர்வு பற்றி தெளிவான முடிவு எடுக்க வேண்டும்: பிரேமலதா பேட்டி