×

மாநகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் கணக்கு தணிக்கை?

கோவை: கோவை மாநகராட்சி பணிகள் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களின் கணக்குகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் தணிக்கை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. கோவை மாநகராட்சியில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான நபர்களுக்கு முறைகேடாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், இதில், முன்னாள் அமைச்சருக்கு 8 முதல் 12 சதவீதம் கமிஷன் வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து, திமுக சார்பில் மாநகராட்சி ஆணையர் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் மனுக்கள் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார், கடந்த வாரம் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சியில், முன்னாள் அமைச்சரின் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்பட்ட ஒப்பந்தப் பணிகள் குறித்த கணக்குகளை லஞ்ச ஒழிப்புப் போலீசார் நேற்று தணிக்கை செய்து அதில் முறைகேடுகள் நடந்துள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள பணிகள், ஒப்பந்த தொகையில் முடிக்கப்பட்டுள்ளதா? என்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டதாக தெரிகிறது….

The post மாநகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் கணக்கு தணிக்கை? appeared first on Dinakaran.

Tags : Velumani ,Coimbatore ,Coimbatore Corporation ,Dinakaran ,
× RELATED அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து