×

மாணவர் தூக்கிட்டு தற்கொலை

மங்களூரு: மங்களூருவில் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது சாவிற்கு பேராசிரியர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார். பெங்களூரு குமாரசாமி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் பரத்(20). இவர் மங்களூருவில் விடுதியில் தங்கி ஒட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சகமாணவர்கள் இதுகுறித்து விடுதியின் நிர்வாக அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விடுதியில் ஆய்வு செய்த போது மாணவர் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், பேராசிரியர் தனது திட்டப்பணிகளை நிராகரித்தாகவும்,தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.எனவே தற்கொலை செய்துக்கொள்வதாக கூறியுள்ளார். தொடர்ந்து மாணவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் தனது தாய்க்கு செல்போனில் அழைப்பு விடுத்துள்ளார். அவர் அழைப்பை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து கடிதத்தின் அடிப்படையில் மாணவரின் குடும்பத்தினர் போலீசில் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்….

The post மாணவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Mangaluru ,Mangalore ,
× RELATED சென்னை-மங்களூரு எக்ஸ்பிரசில் கூடுதல் ஏசி பெட்டி இணைப்பு