×

மழை நீர் சேகரிப்பு குட்டையில் தண்ணீர் அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை

ஈரோடு, ஆக. 10: ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியானது அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில், ஈரோடு கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை, கிளை அஞ்சலகங்களிலும் விற்பனைக்கு உள்ளது. ஒரு கொடி 25 ரூபாயாகும். பொதுமக்கள், அவரவர் வீடுகளுக்கு அருகே உள்ள அஞ்சலகங்களில் 25 ரூபாய் மட்டும் செலுத்தி தேசிய கொடியை பெறலாம்.

மேலும் https://www.epostoffice.gov.in என்ற இணைய தள முகவரியை பயன்படுத்தி, ஆன்லைன் மூலம் பதிவு செய்து தபால்காரர் மூலம் தங்கள் வீட்டுக்கே பட்டுவாடா செய்யும் வசதி உள்ளது. அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் மொத்தமாக தேசிய கொடியை வாங்க விரும்பினால், ஈரோடு கோட்டத்தில் உள்ள ஈரோடு, பவானி, கோபி ஆகிய தலைமை அஞ்சலகங்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post மழை நீர் சேகரிப்பு குட்டையில் தண்ணீர் அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை appeared first on Dinakaran.

Tags : Erode ,Ag ,Herod Master Post Office ,Superintendent ,Gobalan ,Independence Day ,Erode Castle ,Dinakaran ,
× RELATED ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை விலை உயர்வு