×

மழை எதிரொலியால் பரிதாபம் பயணிகள் இன்றி ஓடும் நீலகிரி மலை ரயில்

குன்னூர்: தமிழகத்தில் மழை எதிரொலியாக குன்னூர் மலை ரயில் நிலையம் சுற்றுலா பயணிகள் இன்றி  வெறிச்சோடி காணப்பட்டது. நூற்றாண்டு பழைமை மலை ரயில் என்பதால்  இதில் பயணிக்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர். மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் இந்த மலை ரயில் பல்வேறு மலைக்குகைகள் வழியே பயணம் செய்கிறது. மலைப்பாதையில் உள்ள இயற்கை வளங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இதில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில்  குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையேயான தண்டவாளத்தில் பாறைகள் விழுவதால் வரும் 15ம் தேதி வரை குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின்  வருகை குறைந்துள்ளது. இதனால் குன்னூர்- ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில் சுற்றுலா பயணிகள் இன்றி சென்று வருகிறது. குன்னூர் ரயில் நிலையமும் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது….

The post மழை எதிரொலியால் பரிதாபம் பயணிகள் இன்றி ஓடும் நீலகிரி மலை ரயில் appeared first on Dinakaran.

Tags : Nilgiri Hill ,Coonoor ,Coonoor hill ,station ,Tamil Nadu ,Nilgiri ,Dinakaran ,
× RELATED நீலகிரி மலை ரயில் 125 ஆண்டு நிறைவு..!!