×

மருத்துவ காப்பீடு முகாம் நடத்த மக்கள் கோரிக்கை

தொண்டி,நவ.5: தொண்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் பெரும்பாலானோர் மருத்துவ காப்பீடு அட்டை இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏழை எளிய மக்களும் மருத்துவ செலவை ஈடு செய்யும் வகையில் கலைஞர் காப்பீடு திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மருத்துவ செலவு அதிகமாக உள்ள பெரிய பெரிய நோய்கள் எல்லாம் தீர்க்க இந்த திட்டம் உதவியாக இருந்தது. இத்திட்டம் அறிமுகமான காலக்கட்டத்தில் கிராமங்களில் முகாம் அமைக்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் போதிய கவனம் செலுத்தாததால் தற்போது ஏராளமான குடும்பம் இந்த காப்பீடு அட்டை இல்லாமல் சிரமப்படுகின்றனர். அதனால் ஊராட்சிகளில் முகாம் நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர். தமுமுக மாநில செயலாளர் சாதிக்பாட்சா கூறியது, திடீர் நோயாளிகள் பாதிக்கப்படுபவர்கள் ராமநாதபுரம் சென்று காப்பீடு அட்டை எடுக்க வேண்டியுள்ளது. இது கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் காப்பீடு அட்டை பொதுமக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருப்பதால் அனைத்து குடும்பத்தாரும் காப்பீடு எடுக்கும் வகையில் கிராமங்களில் காப்பீடு அட்டை முகாம் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post மருத்துவ காப்பீடு முகாம் நடத்த மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thondi ,Dinakaran ,
× RELATED பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய கோரிக்கை