×

மேற்படிப்பு, வேலை வழிகாட்டி வகுப்புகள் எப்போது துவங்கும்? : மாணவர்கள் எதிர்பார்ப்பு

சென்னை: பத்து மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலைவழிகாட்டி வகுப்புகள் எப்போது தொடங்கும் என எதிர்பார்ப்புடன் மாணவர்கள் காத்திருக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதி முடித்தவுடன், அவர்கள் உயர்கல்விக்கு செல்லுதல் மற்றும் வேலைக்கு வழிகாட்டுதல் ஆகியவற்றை தெரிவிக்க கடந்த ஆண்டு 1162 இடங்களில் பள்ளிக் கல்வித்துறை மூலம் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. அதற்காக, கையேடு ஒன்றையும் பள்ளிக் கல்வித்துறை தயாரித்து வழங்கியது. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 152 நகராட்சிகள், 387 ஊராட்சி ஒன்றியங்களில் கிராம மாணவர்களுக்காக 571 கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு மேற்கண்ட கருத்தரங்குகள் நடத்த மானியக்கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்த மாணவர்களுக்கு இந்த கருத்தரங்கு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அரசு மேனிலைப் பள்ளிகளில் இதற்கான மையங்கள் அமைத்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவித்தது. இதற்காக 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புகள் தொடர்பாக மாணவர்கள், ெபற்றோர் வேண்டிய தகவல்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் இலவச தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான தேர்வு நேற்றுடன் முடிந்த நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு 20ம் தேதி முடிய உள்ளன. இந்நிலையில், உயர்கல்வி மற்றும் வேலை வழிகாட்டிக்கான பயிற்சி வகுப்பு தொடங்க பள்ளிக் கல்வித்துறை எப்போது முன்வரும் என்று மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags :
× RELATED அனைத்து வகைகளிலும் வடகிழக்கு...