×

மருத்துவர்கள், செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களையும் தமிழக அரசு, பணிநிரந்தரம் செய்திருக்க வேண்டும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகின்ற செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யாததால் அவர்கள் சிரமத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே தமிழ்நாடு அரசு மருத்துவ  சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட சுமார் 12 ஆயிரம் செவிலியர்களில் சுமார் 3,200 பேரை பணிநிரந்தரம் செய்த நிலையில் மீதமுள்ள சுமார் 7,800 செவிலியர்களை காலம் தாழ்த்தாமல் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் ஊரக நலத்திட்டத்தின் கீழ் பணி அமர்த்தப்பட்ட ஆயுஷ் மருத்துவர்கள், சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவ அலுவலர்கள் கடந்த 13 ஆண்டுகளாக பணிநிரந்தரம் செய்யப்படாமல்  பணிபுரிகின்றனர். இவர்களுக்கு நாள் அடிப்படையில் ஊதியம் வழங்கி வந்தாலும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இவர்களுக்கு கடந்த மே மாதம் ஊதியம் சற்று உயர்த்தி வழங்கப்பட்டாலும் அது அவர்களுக்கு பொதுமானதாக இல்லை. இவர்களை பணிநிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வாதாரம் உயர வழி வகுக்க வேண்டும். எனவே அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஆயுஷ் மருத்துவர்கள், சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் ஆகியோரை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post மருத்துவர்கள், செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,Chennai ,Tamil State Congress ,President ,Dinakaran ,
× RELATED தமிழக மீனவர்களை அவமானப்படுத்துவதை...