×

மரக்காணம் காவல் நிலைய வளாகத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் மக்கி வீணாகும் அவலம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மரக்காணம்:  விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதி கிழக்கு கடற்கரை சாலை ஓரம் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி சாலை  விபத்துக்கள் ஏற்படுகிறது. இது போல் சாலை விபத்தில் சேதம் அடையும் வாகனங்களை வழக்குபதிவு செய்து இங்குள்ள காவல் நிலைய வளாகத்தில்  நிறுத்துகின்றனர். மேலும் புதுவையில் இருந்து தினமும் சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு பிராந்தி, கள்ளச்சாராயம் போன்ற மது பானங்கள்  கடத்தப்படுகிறது. இது போல் கடத்தப்படும் வாகனங்களை சோதனைச்சாவடிகளில் போலீசார் மடக்கி பிடித்து அவைகளையும் பறிமுதல் செய்து, மரக்காணத்தில்  இருக்கும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மையத்திற்கு எடுத்து வருகின்றனர். இந்த வாகனங்களும் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்படுகிறது.  பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை மீட்க வேண்டும் என்றால் அதன் உரிமையாளர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலை உள்ளது.   இதனால் பலர் தங்களது வாகனங்களை வெளியில் எடுக்காமலேயே விட்டு விடுகின்றனர். இதன் காரணமாக மரக்காணம் காவல் நிலைய  வளாகத்தில் மாதக்கணக்கில் 50க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் தற்போது மக்கி சேதம் அடைந்துள்ளது. எனவே மரக்காணம் காவல் நிலைய வளாகத்தில்  மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை ஏலம் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்,  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை மீட்க வேண்டும் என்றால் அதன் உரிமையாளர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலை உள்ளது….

The post மரக்காணம் காவல் நிலைய வளாகத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் மக்கி வீணாகும் அவலம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Marakanam police ,Marakanam ,Villupuram district ,East Coast Road ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி எதிரொலி...