×

மண்புழு உரங்களை பயன்படுத்தி இயற்கை வழியில் உணவு உற்பத்தி: கவர்னர் பேச்சு

சென்னை: சென்னையில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 70 பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கிண்டி ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கவர்னர் மாளிகையில் தயாரிக்கப்பட்ட மண்புழு உரங்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று இலவசமாக வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது: மண்புழு உரத்தினை நிலத்திற்கு இடுவதினால் மண்ணில் உள்ள ரசாயனத்தின் அளவு குறைக்கப்பட்டு, மண்ணின் உயிர் தன்மை மேம்படுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின்  அளவு அதிகரிக்கிறது.

மண்புழு உரம் மண்ணின் கடின தன்மையை குறைத்து செடிகளின் வேர்கள் நன்கு வளர்வதற்கான காற்றோட்டம், நீர்பிடித்தன்மை, இயற்கை அங்கக தன்மை போன்றவற்றை மேம்படுத்துகிறது. ரசாயன இடுபொருட்களின் பயன்பாட்டை குறைத்து, மண்புழு உரங்களை பயன்படுத்தி இயற்கை வழியில் உணவு உற்பத்தி செய்து நமது தேக ஆரோக்கியம் மற்றும் சந்ததிகளைக் காப்போம். இயற்கை உரங்களை பெற்று இயற்கை வழியில் காய்கறிகளை உற்பத்தி செய்து, பயன்பெற வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை...