×

மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை பணமதிப்பிழப்பிற்கு நிகராக உள்ளது : ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி : மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை பணமதிப்பிழப்பிற்கு நிகராக உள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 18வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கைக்கு காங்கிரஸ் கட்சி ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, புதிய தடுப்பூசி கொள்கையை பணக்காரர்களுக்கு சாதகமாகவும் ஏழை மக்களை புறக்கணிப்பது போல் உள்ளதாகவும் சாடியுள்ளார். பணமதிப்பிழப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாத பாதிப்பை இந்த திட்டம் ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். பணமதிப்பிழப்பு காலத்தை போல தடுப்பூசியை பெற சாதாரண மக்கள் வரிசையில் நிற்கும் சூழல் உருவாகுவதுடன் தங்களது பணம், உடல்நலம், வாழ்க்கை ஆகியவற்றை இழப்பார்கள் என்றும் இதன்மூலம் சிறு தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயன்பெறும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்….

The post மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை பணமதிப்பிழப்பிற்கு நிகராக உள்ளது : ராகுல் காந்தி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Center ,Rahul Gandhi ,New Delhi ,Congress ,central government ,
× RELATED உண்மையான சமத்துவம், நீதியை நிலைநாட்ட...