×

மதுரை உட்பட நாடு முழுவதும் உள்ள 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு புது பெயர்; பெயரை தேர்வு செய்ய ஒன்றிய அரசு தீவிரம்.!

புதுடெல்லி: நாடு முழுவதும் 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு புதியதாக பெயரை வைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மேற்கண்ட 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும் அந்தந்த மாநில வீராங்கனைகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், ராணுவ வீரர்கள், வரலாற்று சின்னங்களின் அடிப்படையிலான பெயர்களை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் இருந்து ஆலோசனைகள் கோரப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் புதிய பெயர்கள் தொடர்பான விபரங்களை அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) சில பெயர்களின் பட்டியலை ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனைகள் மட்டுமின்றி, பகுதியளவு கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டுள்ளன. பிரதமர் ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகள், பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும்படி மூன்று அல்லது நான்கு பெயர்களை பரிந்துரைக்க மாநில அரசிடமும் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய பெயர் பட்டியலில் போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ், நாக்பூர், ரேபரேலி மதுரை ஆகிய இடங்களில் கட்டப்பட்ட மற்றும் கட்டப்பட்டு வரும் மருத்துவமனைகளும் அடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன….

The post மதுரை உட்பட நாடு முழுவதும் உள்ள 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு புது பெயர்; பெயரை தேர்வு செய்ய ஒன்றிய அரசு தீவிரம்.! appeared first on Dinakaran.

Tags : 23 AIIMS ,Madurai ,Union Government ,New Delhi ,AIIMS ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு பணி போட்டித் தேர்வுக்கான பயிற்சி