×

மதுரைவீரன் கோயில் விழா 10ம் தேதி காப்பு கட்டி துவங்குகிறது

 

க.பரமத்தி, ஜூலை 7: க.பரமத்தி அருகே புன்னம்நடுப்பாளையம் காலனி மதுரைவீரன் கோயில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர். க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சி நடுப்பாளையம் காலனிதெருவில் மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருப்பண்ணசாமி, கன்னிமார்சுவாமி ஆகிய தெய்வங்களுக்கு முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடைபெற்று வருகிறது.இந்த கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.

இவ்வாண்டு திருவிழாவை முன்னிட்டு வருகிற 10ம் தேதி காலை 6 மணிக்கு காப்பு கட்டுதல் நடைபெறுகிறது. இதில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு காவிரி ஆற்றில் புனித தீர்த்தம் எடுத்து வருகின்றனர். இரவு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகள் நடைபெற்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். மறுநாள் (11ம் தேதி) கிடா வெட்டுதல், பெரும்பூஜை வழிபாடு நடத்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 

The post மதுரைவீரன் கோயில் விழா 10ம் தேதி காப்பு கட்டி துவங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Madurai Veeran Temple Festival ,K.Paramathi ,Punnam Nadupalayam Colony ,K.Paramathi. ,Madurai ,Veeran ,Bommiyammal ,Vellaiyammal ,Karuppannaswamy ,Kannimarswamy ,Nadupalayam Colony ,Punnam Panchayat ,Union… ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...