×

மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசிய விவகாரம் தமிழகத்தில் 11 வழக்கில் 14 பேர் கைது: டிஜிபி தகவல்

சென்னை: தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் வீசிய சம்பவங்கள் தொடர்பாக கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 19 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. புலன் விசாரணைக்கு பின் கீழ்க்கண்ட 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகர, குனியமுத்தூர் காவல் நிலைய எல்லையில் ஒரு வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்ட கார் மீதும் மற்றும் சுப்புலட்சுமி நகரில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சம்பவத்தில் மதுக்கரையை சேர்ந்த ஜேசுராஜ் மற்றும் குனிமுத்தூரை சேர்ந்த இலியாஸ் கைது செய்யப்பட்டனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி, குமரன் நகர் பகுதியில் கார் மற்றும் ஆட்டோக்களில் மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய பொள்ளாச்சியை சேர்ந்த முகமது ரபிக் (26), மாலிக் (ஏ) சாதிக் பாஷா (32), ரமிஸ்ராஜா (36) கைது செய்யப்பட்டனர்.சேலம் மாநகரம், அம்மாபேட்டை, காவல்நிலைய எல்லையில் ஒரு வீட்டின் முன்பு மண்ணெண்ணெய் பாட்டிலை வீசிய வழக்கில் கிச்சிபாளையம் சேர்ந்த செய்யது அலி (42), காதர் உசேன் (33), பொன்னாம்மாபேட்டையை சேர்ந்த காதர் உசேன் (33) கைது செய்யப்பட்டனர். மதுரை மாநகரம் கீரத்துறை காவல் நிலைய எல்லை மேல அனுப்பானடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கார் ஷெட் அருகில் மண்ணெண்ணெய் பாட்டிலை வீசிய வழக்கில் மதுரை நெல்பேட்டை பகுதியை சேர்ந்த சம்சுதீன் (எ) எட்டு பாவா சம்சுதீன் (32), சம்மட்டிபுரத்தை சேர்ந்த உசேன் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லையில் ஒரு கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீது மண்ணெண்ணெய் பாட்டிலை வீசிய வழக்கில் பேகம்பூர் பகுதியை சேர்ந்த சிக்கந்தர் (22) கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் ஈரோடு தாலுகா காவல் நிலைய எல்லை டெலிபோன் நகரில் உள்ள மரச்சாமான் கடையில் தீ வைக்க முயற்சித்த குற்ற வழக்கில் ஈரோடு பகுதியை சேர்ந்த சதாம் உசேன், ஆசிக், ஜாபர் மற்றும் கலில் ரகுமான் கைது செய்யப்பட்டனர். இதுவரை 11 வழக்குகளில் 14 குற்றவாளிகள் கைது செய்யயப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். …

The post மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசிய விவகாரம் தமிழகத்தில் 11 வழக்கில் 14 பேர் கைது: டிஜிபி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DGP ,Chennai ,Tamil Nadu Police ,Shailendrababu ,Dinakaran ,
× RELATED வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவரை உயர்...