×

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊட்டி, ஜூலை 23: மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஊட்டியில் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. மணிப்பூர் மாநிலத்தில் குக்கீ இன பெண்களுக்கு நடந்து வரும் அநீதிகளை கண்டித்தும், பெண்களை பாலியல் தொல்லை கொடுத்து ஊர்வலமாக அழைத்து வந்தர்களை கைது செய்ய வலியுறுத்தியும், இதனை கண்டுக் கொள்ளாமல் உள்ள மத்திய அரசை கண்டித்தும் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்பாட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், மணிப்பூர் பிரச்னையில் மத்திய அரசு தலைமிடாமல் உள்ளதை கண்டித்தும், மணிப்பூர் அரசை கலைக்க வேண்டும். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.

ஆர்பாட்டத்திற்கு நீலகிரி மாவட்ட ஜனநாயக மாதர் சங்க செயலாளர் ஆதிரா தலைமை வகித்தார். தீண்டாண்மை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் இளம்பருதி துவக்கவுரையாற்றினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் யோகண்ணன், சிஐடியு., மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம், சிபிஐஎம்., தாலூகா செயலாளர் நவீன்சந்திரன், மாதர் சங்க தலைவர்கள் ஜெயலட்சுமி, பிரியா, பிரமிளா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் அடையாளகுட்டன்,

ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ராமன் கிருஷ்ணன், வசந்தி, பிரியா, ராஜரத்தினம், கண்ணன், ரபீக் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். இந்த ஆர்பாட்டத்தின் போது மத்திய அரசையும், மணிப்பூர் அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

The post மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Democratic Mother Sangh ,Manipur ,Ooty ,Manipur Incident ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர்...