×

மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்த ஆலோசனை

கமுதி : கமுதி பகுதி விவசாயிகளுக்கு மக்காச்சோளம் படைப் பிரிவை தடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது.கமுதி வட்டாரத்தில், மேலராமநதி,நீராவி கீழமுடிமன்னார் கோட்டை,ராமசாமிபட்டி, என்.கரிசல்குளம், எழுவனூர் மற்றும் கூடக்குளம் போன்ற கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, ஏக்கரில் விவசாயிகள் மக்காச்சோள பயிர் சாகுபடி செய்துள்ளார்கள். தற்போது நடவு செய்து 15 நாட்கள் முதல் சுமார் 60 நாட்கள் பயிராக உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படைப்புழு தாக்குதலால், அதிகளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டன.எனவே இதனை தடுக்கவே வேளாண்துறையினர் சார்பில் விழிப்புணர்வு முகாம் மற்றும் ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மக்காசோளத்தில் படைப்புழு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு சில தொழில் நுட்பங்கள் பரிந்துரை செய்யப்பட்டு இதனை செயல் விளக்கம் மூலம் விவசாயிகள் அறிந்து கொள்ள மேலராமநதி கிராமத்தில் விவசாயி மணி நிலத்தில் செயல் விளக்க திடல் தொழில் நுட்பங்களுடன் அமைத்து விளக்கமளிக்கப்பட்டது.மேலும் இதுபற்றி கூறும்போது, கடைசி உழவின்போது வேப்பம் பிண்ணாக்கு 100 கிலோ இடவேண்டும் என்றும், வீரிய ஒட்டு ரகங்களை பரிந்துரையின்படி விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும் என்றும், வரப்பு பயிராக சூரியகாந்தி, தட்டைப்பயிறு மற்றும் எள் விதைப்பு செய்தல் வேண்டும். படைப்புழு தாக்குதல் குறித்து கண்காணிப்பதற்கு இனக்கவர்ச்சிப் பொறி ஏக்கருக்கு ஐந்து அமைக்க வேண்டும். இந்த முறைகளை கையாள்வதன் மூலம் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என்று வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தங்கராஜ் விளக்கிக் கூறினார். துணை வேளாண்மை அலுவலர் சேதுராம், வட்டார தொழில்நுட்ப மேலாளர் முனியசாமி, தொழில்நுட்ப மேலாளர் சுபாஷ், சந்திரபோஸ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்….

The post மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்த ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Melaramanadi ,Neeravi Keezhamudimannar fort ,Ramasamypatti ,Dinakaran ,
× RELATED லாரி மோதி கிளீனர் பலி