×

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவிகலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்

ஈரோடு, ஏப். 18: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று வழங்கினார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், பல்வேறு உதவித்தொகைகள், வேலைவாய்ப்பு என 210 மனுக்கள் பெறப்பட்டு அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இக்கூட்டத்தில் கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து இரு கால்கள் செயல் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு படுக்கை, புண் ஏற்படாமல் இருப்பதற்காக தலா ரூ 2,023 மதிப்பில், 70 மாற்றுத்திறனாளிகளுக்கு ரு. 1.41 லட்சம் மதிப்பில் காற்றுப் படுக்கைகளை (Air Bed) வழங்கினார். அதேபோல, தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.2,000க்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இக்கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் குமரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் விபரம் வரும்மாறு; திண்டல், புதுக்காலனி பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், கோவிந்தராஜ் ஆகியோர்அளித்த மனு விவரம்: பவானி வட்டம், சலங்கபாளையம் கிராமத்தில் அன்பு நகர் எனும் வீட்டுமனைப் பிரிவில் எண் 16, 17 ஆகிய 2 இடங்களையும் கடந்த 1997ல் வாங்கினோம். இதற்கான பட்டாவும் பெற்றுள்ளோம்.இந்த நிலையில், எங்களது இடத்தை அளவீடு செய்து, அத்து பிரித்து தருமாறு கடந்த மாதம் ஈ-சலான் மூலமாக தொகை செலுத்தியுள்ளோம். இந்த நிலையில், பவானி வட்டாட்சியரும், சலங்கபாளையம் கிராம நிர்வாக அலுவலரும், குறிப்பிட்ட எங்கள் இடத்தின் பகுதியை அன்பு நகர் இல்லை, அது ஓம்சக்தி நகர், எனவே அந்த இடத்தின் வரைபடத்தை கொடுக்க வேண்டும் என, தவறான தகவலைக் கேட்டுள்ளார்.எனவே, எங்களது இடத்தை முறையாக அளவீடு செய்து பிரித்துக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருமாண்டம்பாளையம் மா.கம்யூ நிர்வாகி இளங்கோ அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பெருந்துறை தாலுகா, பெருந்துறை ஏ.கிராமத்தில் 15.36 ஏக்கர் நிலம் குறவர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசால் இலவசமாக வழங்கப்பட்டது.அந்த இடத்தை, வேறு எந்த உயர் சாதியினரும் விலைக்கு வாங்க உரிமை இல்லை. அப்படி ஒருவேளை வாங்கினாலும் அது சட்டப்படி செல்லாது. இந்த நிலையில், கடந்த 1963, 1966ம் ஆண்டுகளில் அந்த இடத்தில் உள்ள 2.45 ஏக்கர் நிலம் உயர் சாதியினரால் கிரையம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த இடம் வாரிசு அடிப்படையில் எனக்கு பாத்தியப்பட்டதாகும்.

இதற்கான தீர்பாய உத்தரவை நான் பெற்றிருந்த நிலையில், அதுகுறித்து, விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க பெருந்துறை வட்டாட்சியருக்கு, ஈரோடு கோட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், சுமார் ஒரு வருடத்துக்கு மேலாகியும் பெருந்துறை வட்டாட்சியர், உயர் சாதியினருக்கு ஆதரவாக செயல்படும் நோக்கில், அந்த இடம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க காலம் தாழ்த்தி வருகிறார். எனவே, எனக்குச் சொந்தமான இடம் குறித்து, காலதாமதமின்றி விசாரித்து ஈரோடு கோட்டாட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்க, பெருந்துறை வட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடமும் வைத்துள்ளேன். இந்நிலையில், அதே பகுதியைச் சேந்த நபர் ஒருவர் எனது வீட்டுக்கு அருகில் ஒரு கோயில் கட்டி நிர்வகித்து வருகிறார். அந்த கோயிலில் இருந்து ஒலிபெருக்கி மூலமாக தினமும் காலையிலும், மாலையிலும் அதிக அளவிலான ஒலியை எழுப்பி கடும் இடையூறு செய்து வருகின்றனர். மேலும், கோயிலின் மேல் நிலைத் தண்ணீர் தொட்டியில் நிரம்பி வழியும் தண்ணீர் எனது வீட்டுப் பகுதியில் விழுமாறு வைத்துள்ளனர். இந்த இடையூறுகளைக் களைய வலியுறுத்தி நம்பியூர் தாசில்தார், கோபி டி.எஸ்.பி., ஈரோடு எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளிடம் இதுவரை 7க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, கோயில் கட்டி இடையூறு ஏற்படுத்தி வரும் நபர் மீது நடவடிக்கை எடுத்து, நாங்கள் அமைதியுடன் வாழ வகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவின் விவரம்: நம்பியூர் தாசில்தார் அலுவலகம் அருகில் உள்ள ஓணான்கரடு, மேட்டுக்காடு, கரட்டுப்பாளையம் கிராம வண்டிப்பாதையை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆவணங்களின் அடிப்படையில், வண்டிப்பாதையை மீட்டு, மீண்டும் பழைய நிலையில் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு கோபி கோட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார். மேலும் இதுகுறித்து, நீதிமன்ற பரிந்துரையும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட வண்டிப்பாதையை மீட்கும் பணியில் நம்பியூர் தாசில்தார் காலதாமதம் செய்து வருகிறார். எனவே, நீதிமன்றப் பரிந்துரை மற்றும் கோபி வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை நம்பியூர் தாசில்தார் உடனடியாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவி
கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்
appeared first on Dinakaran.

Tags : Government Assistant Collector ,Krishnanunni ,People's Grievance Day ,Erode ,Collector ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் கலெக்டர்...