×

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 7.01 லட்சம் பேர் பயன்; குரங்கு அம்மை பரவல் இதுவரை இல்லை.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 7.01 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பரவல் இதுவரை கண்டறியப்படவில்லை. மழைநீர் தேங்குவதை நிரந்தரமாக தவிர்க்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என  கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியன் சாலை, ஜெயராமன் தெரு, மசூதி தெரு, ஆலந்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால் கட்டுமான பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களை தேடி மருத்துவம் ஒரு மகத்தான சாதனையைப் படைத்திருக்கிறது. குறுகிய காலத்தில் சுமார் 70 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இதுவரை முதல்கட்ட தடுப்பூசியை 93.73 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர். 2ம் கட்ட தடுப்பூசியை 82.48 சதவீதம் செலுத்தி உள்ளனர். 1 கோடியே 63 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். வரும் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.தொடர்ந்து, குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் திரும்புவர்களிடம் அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தன. சோதனை செய்ததில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. தமிழகத்தில் குரங்கு அம்மை பரவல் இதுவரை இல்லை. ஆகவே, குரங்கு அம்மை குறித்தான அச்சம் தேவையில்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்….

The post மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 7.01 லட்சம் பேர் பயன்; குரங்கு அம்மை பரவல் இதுவரை இல்லை.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,Subramanian ,
× RELATED பொய் தகவல் மூலம் மக்களிடம் பதற்றத்தை...