- மகளிர் தினம்
- வள்ளியூரில்
- சர்வதேச மகளிர் தினம்
- வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் குழந்தைகள் அமைப்பு
- சென்னை
- கல்லூரி
- ஜனாதிபதி
- பொறியாளர்
- லாரன்ஸ்
- கல்லூரி செயலாளர்
- ஹெலன் லாரன்ஸ்…
- மகளிர் தின கொண்டாட்டம்
- தின மலர்
வள்ளியூர்,மார்ச் 8:வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் குழந்தைகள் அமைப்பு சார்பில் ‘உலக மகளிர்தினம்’ நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி தலைவர் பொறியாளர் லாரன்ஸ் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் ஹெலன் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் சுஷ்மா ஜெனிபர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். நெல்லை மாவட்ட வேளாண் விதை ஆய்வு அலுவலர் சுஜாதாபாய், 9வது பட்டாளியன் சப் இன்ஸ்பெக்டர் லாவண்யா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கல்லூரி தமிழ்துறை தலைவி ரெத்னஷீபா மினி வரவேற்றார். இன்னர் வேர்ல்டு கிளப் தலைவர் அனிஷ்கா ரெக்ஸ் மாணவிகளுக்கு மகளிர் தினவிழா வாழ்த்து தெரிவித்தார். சிறப்புரை ஆற்றினார்கள். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிர் 14 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மதன்ராஜ் நன்றி கூறினார்.
The post மகளிர் தின விழா appeared first on Dinakaran.