×

போர்க்குரல் எழுப்பிய வீராங்கனைகள் பணிந்தது கிரிக்கெட் வாரியம்

மும்பை: கிரிக்கெட்  வீரர்களுக்கு தனி  விமானம், வீராங்கனைகளுக்கு பயணிகள் விமானமா? என்று  வீராங்கனைகள் போர்க்குரல் எழுப்பியதால் பணிந்த  கிரிக்கெட் வாரியம், அவர்களுக்கும் தனி விமானங்கள் ஏற்பாடு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு நியூசிலாந்து உடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. கூடவே இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு தலா 3 ஒருநாள், டி20 ஆட்டங்களில் விளையாட உள்ளது. எனவே ஆடவர், மகளிர் அணிகள்  ஜூன் 2ம் தேதி தனி விமானத்தில்  இங்கிலாந்து புறப்படுகின்றனர். அதற்காக இந்திய  வீரர்கள், வீராங்கனைகளை மும்பைக்கு வரவழைத்து குவாரண்டைன் செய்யும் பணி நேற்று தொடங்கியது. வீரர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கூடவே  அவர்கள் மும்பை வர தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் வீராங்கனைகள் அவர்களாகவே கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டு, அந்த முடிவுகளுடன் பயணிகள் விமானத்தில் வர  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு  வாரியம்(பிசிசிஐ)  அறிவறுத்தியிருந்தது.அதற்கு வீராங்கனைகள் உட்பட பல்வேறு தரப்பினர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புகள்  நேற்று முன்தினம்  சமூக ஊடகங்களில் வைரலாகின. அந்த எதிர்ப்புகளுக்கு பணிந்த பிசிசிஐ  தன் முடிவுகளை மாற்றிக் கொண்டது. கூடவே  வீராங்கனைகளுக்கும்  நேற்று முதல் அவர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றன. வீராங்கனைகள் மும்பைச்  செல்ல தனி விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இது குறித்து இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், ‘வீராங்கனைகள் மும்பை செல்ல தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கூடவே  வீராங்கனைகளின் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றன’ என்று  சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்….

The post போர்க்குரல் எழுப்பிய வீராங்கனைகள் பணிந்தது கிரிக்கெட் வாரியம் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Dinakaran ,
× RELATED மும்பையில் காணப்பட்ட வித்தியாசமான காட்சி….