×
Saravana Stores

போதையில் மட்டையான மாப்பிள்ளை: திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே தொட்ட படக்கான்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணன்(32), தொழிலாளி. இவருக்கும், திருவண்ணாமலை அடுத்த செங்கம் நேரு நகரை சேர்ந்த லட்சுமி(22) என்பவருக்கும் இன்று காலை ராயக்கோட்டை வஜ்ஜிரப்பள்ளம் ஈஸ்வரன் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக பெண் வீட்டார் இன்று காலை வேனில் கிளம்பி கோயிலை வந்தடைந்தனர். ஆனால், வெகுநேரமாகியும் மாப்பிள்ளை வீட்டார் வரவில்லை. இதனால், பெண் வீட்டார், மாப்பிள்ளையின் வீட்டிற்கு சென்று பார்த்த போது, சரவணன் போதையில் எழுந்திருக்காத நிலையில் கிடந்தார். இதனையடுத்து, அவரை பெண் வீட்டார் இழுத்துச்சென்று மாரண்டஅள்ளி போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, மணப்பெண் திருமணத்திற்கு மறுத்து விட்டார். ஆனால், போதை தெளிந்த சரவணன் மன்னித்து விடுமாறு கூறியுள்ளார். லட்சுமி மறுத்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது. மேலும், பெண் வீட்டார் திருமணத்திற்காக செலவு செய்த பணத்தை தருமாறு காவல் நிலையத்தில் பேசி முடிவு செய்தனர். இதுகுறித்து, பெண்ணின் தாய்மாமா பாபு அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post போதையில் மட்டையான மாப்பிள்ளை: திருமணத்தை நிறுத்திய மணப்பெண் appeared first on Dinakaran.

Tags : Groom ,Dharmapuri ,Saravanan ,Patakantadalli ,Marandalli, Dharmapuri district ,Dinakaraan ,
× RELATED தர்மபுரி அரசு மருத்துவமனை முன்...