×

போக்குவரத்து நெரிசலை குறைக்க கோயம்பேடு, வேளச்சேரி, மேடவாக்கம் பகுதிகளில் மேம்பாலத்தை உடனே திறக்க வேண்டும்: அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக அரசு, 2017ம் ஆண்டு சென்னை மாநகரில் கோயம்பேடு சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.100 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு ஒப்புதல் தரப்பட்டு 95 சதவீத பணிகள் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. தற்போது பால பணிகள் 99.99 சதவீதம் முடிவுந்துள்ளது.  கடந்த 13ம் தேதி நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் பணிபுரியும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் ஒரே சமயத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்ததால் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தற்போது கட்டப்பட்டு வரும் பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு உடனுக்குடன் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில் ரூ.100 கோடி செலவில் கட்டப்படும் இரண்டடுக்கு பாலம், ரூ.140 கோடி செலில் கட்டப்படும் மேடவாக்கம் மேம்பாலம் வேளச்சேரி – தாம்பரம் பால பகுதியையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.மேலும், பால பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை குறைத்திட கட்டப்பட்டுள்ள உயர்மட்ட சாலை மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக திறக்க வேண்டும்….

The post போக்குவரத்து நெரிசலை குறைக்க கோயம்பேடு, வேளச்சேரி, மேடவாக்கம் பகுதிகளில் மேம்பாலத்தை உடனே திறக்க வேண்டும்: அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Velachery ,Medavakkam ,Edappadi Palaniswami ,Chennai ,AIADMK ,AIADMK government ,Velachery, ,Dinakaran ,
× RELATED கோயம்பேட்டில் பேருந்து உள்பட...