×

போக்குவரத்து சங்கத்தினர் தென்காசி எம்பியிடம் மனு

ராஜபாளையம், நவ.21: சாலை போக்குவரத்து சங்கத்தினர் தென்காசி எம்பி ராணி  குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். விருதுநகர் மாவட்ட சாலை போக்குவரத்து சங்கத்தினர் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி  குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில், புதிய மோட்டார் வாகன சட்டம், புதிய குற்றவியல் நடை முறைச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதில் மாவட்ட பொருளாளர் கண்ணன், மாநில குழு உறுப்பினர் விஜயகுமார், சிஐடியு டாக்ஸி சங்க நிர்வாக குழு உறுப்பினர் மணிமாறன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோக்ராஜ் கலந்து கொண்டனர்.

The post போக்குவரத்து சங்கத்தினர் தென்காசி எம்பியிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Transport Association ,Tenkasi ,MB Rajapaliam ,Road Transport Association ,MP Rani Kumar ,Virudhunagar District Road Transport Association ,Dinakaran ,
× RELATED தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை