×

பொன்னை அடுத்த கொக்கேரி கிராமத்தில் வைக்கோலுக்கு சமூக விரோதிகள் தீ வைப்பு-விவசாயி வேதனை

பொன்னை :  பொன்னை அடுத்த கொக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் ரவி, விவசாயி. இவர் அப்பகுதி விவசாய நிலத்தில் உள்ள ₹20 ஆயிரம் மதிப்பிலான 100 கட்டு வைக்கோலை தனது வீட்டின் அருகே வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் அவ்வழியாக சென்ற சமூக விரோதிகள் வைத்த தீயினால் வீட்டின் அருகே இருந்த வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரவி மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக குடங்கள் மற்றும் வாளிகளை கொண்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். ஆனாலும் வைக்கோல் எரிந்து நாசமானது. இதனால் விவசாயி ரவி வேதனை அடைந்துள்ளார். இதுகுறித்து மேல்பாடி காவல் நிலைய எஸ்ஐ ஆனந்த்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு நிலவியது….

The post பொன்னை அடுத்த கொக்கேரி கிராமத்தில் வைக்கோலுக்கு சமூக விரோதிகள் தீ வைப்பு-விவசாயி வேதனை appeared first on Dinakaran.

Tags : Kokkeri village ,Ponnai ,Ravi ,Kokkeri ,
× RELATED சாமியாரை அடித்துக்கொன்று சடலம்...