×

பொங்கல் பரிசு தொகை முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர் சக்கரபாணி பேட்டி

திருவாரூர்: பொங்கல் பரிசு தொகை குறித்து ஆய்வு கூட்டத்தை நடத்தி முதல்வர் முடிவு செய்வார் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.திருவாரூரில் அவர் அளித்த பேட்டி: சென்னை சேப்பாக்கம், பெரம்பலூர் மாவட்டத்தை போன்று தமிழகத்தில் அனைத்து நியாய விலை கடைகளிலும் கண்விழி மூலம் பொருட்களை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று (நேற்று) அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் டெண்டர் கோரப்பட்டு அதற்குரிய பணிகள் நடைபெறும் என்றார்.இதைதொடர்ந்து பொங்கல் பரிசு தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் செய்திகள் வருவது குறித்து கேட்டதற்கு, இதுதொடர்பாக ஆய்வு கூட்டத்தை முதல்வர் நடத்தி முடிவு செய்வார். பருவமழையையொட்டி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தேவையான அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் முன்கூட்டியே அனுப்பப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்….

The post பொங்கல் பரிசு தொகை முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர் சக்கரபாணி பேட்டி appeared first on Dinakaran.

Tags : CM ,Minister ,Chakrapani ,Food Minister ,Chief Minister ,
× RELATED சென்னானூர் அகழாய்வில் இரும்பு...