×

பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேட்டி

சிவகங்கை: பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிவகங்கையில் நேற்று அளித்த பேட்டி: பொங்கல் பரிசுத்தொகையை நேரடியாக கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை. கார்டுதாரர்கள் அவரவர் ரேஷன் கடைகளிலேயே வழக்கம் போல் பெற்றுக்கொள்ளலாம். பொங்கலுக்கு வழங்கப்படும் கரும்புகள் தமிழக விவசாயிகளிடமே கொள்முதல் செய்யப்பட உள்ளது. மொத்தம் 12 கோடி கரும்புகள் தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலையில் 2.19 கோடி கரும்புகள் கார்டுதாரர்களுக்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது. நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை. கொரோனா நிவாரணத்தொகையையே ரூ.5 ஆயிரம் வழங்க கோரிக்கை வைத்தோம். தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் புதுப்பிக்கப்படுவதுடன், சுத்தமான முறையில் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். தமிழகம் முழுவதும் 4,500 கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அதில் 2 ஆயிரம் சங்கங்கள் நஷ்டத்தில் உளளன. அனைத்து சங்கங்களும் நல்ல நிலையில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்….

The post பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,KR Periyakaruppan ,Sivagangai ,Dinakaran ,
× RELATED மலிவு விலையில் மருந்துகள் விற்பனை...