×

பொங்கல் பண்டிகை மற்றும் நாளை முழு ஊரடங்கு எதிரொலி: சென்னை தி.நகரில் அலைமோதிய கூட்டம்

சென்னை: நாளை முழு ஊரடங்கு என்பதாலும், பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டதாலும் சென்னை தியாகராய நகரில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தொடர்ந்து கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து கொண்டுள்ளது. நேற்று தமிழகத்தில் 8,000திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக அறிவிப்பு வெளியானது. சென்னையை பொறுத்தவரை 4,000திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது. தொடர்ந்து கொரோனா தொற்றின் வேகம், எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வார நாட்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதியில் ஒருநாள் பொது முடக்கம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.வரும் வாரத்தில் பொங்கல் விழா வர உள்ளதால் அதற்கு பொருட்கள் வாங்குவதற்கும், நாளை பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட உள்ளதால் அதற்கு முன்பே தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்னை தி.நகரில் கூட்டம் அலைமோதியது. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று காவல்துறை தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் கூறி வருகின்றனர். முகக்கவசம் அணியாமல் வரக்கூடிய நபர்களுக்கு முகக்கவசம் கொடுத்து அவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 10,000திற்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்திற்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணியம் இந்த பகுதியில் நடந்து வருகிறது. பொதுமக்கள் எளிதில் தடுப்பூசி செலுத்தி க்கொள்ளும் வகையில் இங்கு தடுப்பூசி சிறப்பு முகாமும் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் நாளை பொதுமுடக்கம் கடைப்பிடிக்க கூடிய இந்த சூழலில் பொங்கல் விழா வர உள்ளதால் தி.நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது….

The post பொங்கல் பண்டிகை மற்றும் நாளை முழு ஊரடங்கு எதிரொலி: சென்னை தி.நகரில் அலைமோதிய கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,T. Nagar, Chennai ,CHENNAI ,Thiagaraya Nagar, Chennai ,
× RELATED வள்ளியம்மன் கோயில் பொங்கல் விழா...