×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் 4 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது: படுக்கையுடன் கூடிய 2ம் வகுப்பு நிரம்பியது; அதிகாரிகள் தகவல்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம்- நெல்லை இடையே  அதிவேக சிறப்பு ரயில் எண் (06001) தாம்பரத்திலிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு நெல்லை சென்றடையும். அதைப்போன்று மறுமார்க்கத்தில் நெல்லை- தாம்பரத்திற்கு அதிவேக  சிறப்பு ரயில் எண் (06002) நெல்லையில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மேலும் சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே அதிவிரைவு  சிறப்பு ரயல் (06005)  மாலை 3.30 மணிக்கு  புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.  மறுமார்க்கத்தில் (06006) நாகர்கோவில் – சென்னை எழும்பூர்  அதிவிரைவு சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 3.10  மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மேலும் நாகர்கோவில்-  தாம்பரம் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் (06004) வரும் 16ம் தேதி  மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு  மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கத்தில்  தாம்பரம்- நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் (06003) 17ம்  தேதி மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை  4.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். அதைப்போன்று நெல்லை- தாம்பரம் இடையே  அதிவிரைவு சிறப்பு ரயில் (06040) 16ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம்  வந்தடையும். மறுமார்க்கத்தில் தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரயில் (06039) 17ம் தேதி காலை 10.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்தடையும். இந்த பொங்கல் பண்டிகைக்கு  இயக்கப்படும் 4 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலே 2ம் வகுப்பு  படுக்கை வசதி கொண்ட சீட்டுகள் அனைத்தும் வேகமாக நிரம்பி காத்திருப்போர் பட்டியலுக்கு வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்….

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் 4 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது: படுக்கையுடன் கூடிய 2ம் வகுப்பு நிரம்பியது; அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Pongal ,CHENNAI ,Southern Railway ,Southern ,Pongal festival ,Dinakaran ,
× RELATED அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர்...