×

பொங்கல் பண்டிகைக்காக ஊட்டிக்கு கரும்பு வந்தாச்சு

 

ஊட்டி,ஜன.13: நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சமவெளிப் பகுதிகளில் இருந்து கரும்பு, மஞ்சள், கூழைப்பூ போன்ற பொருட்கள் நீலகிரிக்கு வந்தன. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை விவசாயிகள்,பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படும் நிலையில்,கரும்பு, மஞ்சள், கூழைப்பு, மண் பானைகள் போன்றவை சமவெளிப் பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு நேற்று வந்து சேர்ந்தன.

கரும்பு, மஞ்சள் போன்ற பொருட்கள் நீலகிரியில் விளையாத நிலையில், ஆண்டு தோறும் சமவெளிப் பகுதிகளில் இருந்து கொண்டு வந்து வியபாரிகள் விற்பனை செய்கின்றனர். நேற்று முதல் இப்பொருட்கள் வரத் துவங்கிதால் மொத்த வியாபாரிகளிடம் இருந்து சிறு வியாபாரிகள் பலரும் வாங்கிச் சென்றனர். திங்கள் கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நாளைமுதல் கரும்பு விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரும்பு ஒன்று ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனையானது.அதேபோல், மாட்டு பொங்கலை முன்னிட்டு திருஷ்டி கயிறு, மூக்கு கயிறு உள்ளிட்டனவும் அதிகளவு விற்பனைக்கு வந்துள்ளன.

The post பொங்கல் பண்டிகைக்காக ஊட்டிக்கு கரும்பு வந்தாச்சு appeared first on Dinakaran.

Tags : Ooty for ,Pongal festival ,Ooty ,Pongal ,Nilgiris ,Ooty for Pongal ,
× RELATED ஊட்டி ரோஜா பூங்கா சாலையோரங்களில் ஆபத்தான மரங்களை அகற்ற கோரிக்கை