×

பேஸ்புக்கில் போலி கணக்கு துவங்கி சினிமா பாடகர் போல் நடித்து பெண்ணிடம் ₹2.40 லட்சம் மோசடி

 

கள்ளக்குறிச்சி, நவ. 29: பிரபல சினிமா பாடகர் பெயரில் பேஸ்புக் கணக்கு துவங்கி திண்டுக்கல் பெண்ணிடம் பண ேமாசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், வாலிபர் ஒருவர் பிரபல சினிமா பாடகர் பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு உருவாக்கி, நட்பாக பேசி பழகி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சுமார் ரூ.2,41,961 வரை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக தெரிவித்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். எஸ்பி பாஸ்கரன் உத்தரவின்பேரில், ஏடிஎஸ்பி சந்திரன் மேற்பார்வையில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் மீனா, திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மோசடி செய்தவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரவர்மன்(34) என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் சொகுசு கார், பைக் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். இவரை திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் ஏற்கனவே கோவை மாவட்ட குற்றப்பிரிவில் இதே மாதிரியான மோசடி வழக்கில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பேஸ்புக்கில் போலி கணக்கு துவங்கி சினிமா பாடகர் போல் நடித்து பெண்ணிடம் ₹2.40 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Facebook ,Kallakurichi ,
× RELATED திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி...