×

பேராசிரியை கொலை வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் கைது

சென்னை: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை அங்காள பரமேஸ்வரி நகரை சேர்ந்தவர் அனிதா (40). தனியார் கல்லூரியில்  தமிழ் பேராசிரியையாக வேலை பார்த்தார். இவருக்கு  திருமணமாகவில்லை. இவரது அக்கா குடும்பத்துடன் வசித்தார். மாடியில் அனிதவும், கீழ் தளத்தில் அக்கா குடும்பத்தினரும் வசித்தனர். கடந்த 9ம் தேதி இரவு அனிதாவின் அக்கா மாடிக்கு சென்று பார்த்தபோது, அனிதா ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார். புகாரின்படி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதேநேரத்தில், அனிதாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், கூர்மையான ஆயுதம் மூலம் அனிதாவின் மார்பகத்தில் குத்தியதால் ரத்தக் கசிவு மற்றும் எலும்பில் அதற்கான தடயங்கள் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து, அனிதாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, அதில், காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோயில் சன்னதி தெருவை சேர்ந்த, நாயக்கன்பேட்டை அரசு பள்ளி தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் சுதாகர் கடைசியாக பேசியது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் அனிதாவை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பேராசிரியை அனிதாவும், சுதாகரும் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றினர். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக் காதலாக மாறியது. பின்னர் அனிதா தனியார் கலைக் கல்லூரியில் தமிழ் பேராசிரியையாக பணியில் சேர்ந்தார். ஆனாலும், அவர்களுக்குள் பழக்கம் தொடர்ந்தது.அனிதாவின் வீட்டில், உறவினர்கள் இல்லாத நேரத்தில், சுதாகரை வர வழைத்து தனிமையில் இருந்துள்ளனர். சுதாகருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இதேபோல், மேலும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியையிடம், சுதாகருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அனிதா, தன்னை 2வது திருமணம் செய்யும்படி வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று அனிதா, சுதாகரை வரவழைத்துள்ளார். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த சுதாகர், மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் அனிதாவின் தாடை மற்றும் மார்பகத்தில் சரமாரியாக குத்தினார். அவர், படுகாயமடைந்து உறவினர்களை செல்போனில் அழைக்கும்போது, தப்பிவிட்டார் என சுதாகர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து உடற்கல்வி ஆசிரியர் சுதாகரை கைது செய்த போலீசார், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.* நெல்மணியால் சிக்கிய கொலையாளிஅனிதாவின் செல்போன் எண் மூலம் போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் இறப்பதற்கு முன் சுதாகர் எண்ணில் அழைத்தது பதிவாகி இருந்தது. மேலும் சுதாகர் மற்றும், அனிதா ஆகியோரின் செல்போன் எண்ணில் பல ஆண்டுகளாக தொடர்பு இருந்தது. அனிதா இறந்தபோது, அவரது அறையில் டி-சர்ட்டின் பாக்கெட் பகுதியும், நெல் மணிகள் சிறிதளவு இருந்தது. இந்த தடயங்களை வைத்து, சுதாகரின் டி-சார்ட், அரிசி ஆலை உரிமையாளரின் மகன் வந்தபோது நெல் மணிகள் இருந்தது தெரிந்தது. …

The post பேராசிரியை கொலை வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Anita ,Parameswari, Angala ,Kanchipuram ,
× RELATED அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு தள்ளுபடி!!