×

பேரணி, பொதுகூட்டத்திற்கான தடையால் டிஜிட்டல் திரைகள் மூலம் மோடி பிரசாரம்; உ.பி-யில் நாளை மறுநாள் முதல் வாக்குசேகரிப்பு.!

லக்னோ: பேரணி, பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் டிஜிட்டல் திரைகள் மூலம் தோன்றி பிரதமர் மோடி முதற்கட்டமாக உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.  நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வரும் 31ம் தேதி வரை தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் பேரணிகள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி, உத்தர பிரதேசத்தில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் மாவட்ட வாக்காளர்களிடம் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை நாளை மறுநாள் தொடங்கவுள்ளார். காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்க உள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர்கள் கூறுகையில், ‘நாளை மறுநாளுடன் பேரணி, பிரசாரத்திற்கு தடை காலம் உள்ளது. ஒருவேளை இந்த தடை நீடிக்கப்பட்டால் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார். மேற்கு உத்தரபிரதேசத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு உட்பட சுமார் 21 சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்வார். மேற்கண்ட மாவட்டங்களில் காணொலி காட்சி மூலம் நடக்கும் பிரசாரத்திற்காக டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இடத்திலும் சுமார் 500 பேரை அமரவைத்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோடியின் பேச்சு அனைத்து சமூக ஊடக தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். இருந்தும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மேற்கு உத்தரபிரதேசத்தில் வீடு வீடாக பிரசாரம் செய்து வருகின்றனர்’ என்றனர்….

The post பேரணி, பொதுகூட்டத்திற்கான தடையால் டிஜிட்டல் திரைகள் மூலம் மோடி பிரசாரம்; உ.பி-யில் நாளை மறுநாள் முதல் வாக்குசேகரிப்பு.! appeared first on Dinakaran.

Tags : Modi ,UP ,Lucknow ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED டாக்டரிடம் மோசடி செய்த இந்திய பெண் தூதர்