×
Saravana Stores

பேனர் வைப்பதை தடை செய்ய விதிவகுக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி,  நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில்வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு பதிலளித்த அரசு அட்வகேட் ஜெனரல்  ஆர்.சண்முகசுந்தரம், . கடந்த 2019ம் ஆண்டே முதல்வர் மு.க.ஸ்டாலின் பேனர்கள் வைக்கக்கூடிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமாட்டேன் எனக் கூறி உள்ளார். கட்சி தொண்டர்களை பேனர்கள் வைக்க கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தி உள்ளார் என்று தெரிவித்தார். இதையடுத்து, அனுமதியின்றி பேனர்கள் வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. மாவட்டங்களுக்கும், தாலுகா நீதிமன்றங்களுக்கும் நான் சென்ற போது ஏராளமான பேனர்களை பார்த்தேன். எனவே, பேனர்கள் வைப்பதை முழுமையாக தடை செய்யும்  வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும். இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் திமுக 6 வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்….

The post பேனர் வைப்பதை தடை செய்ய விதிவகுக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil ,Nadu ,Viluppuram ,
× RELATED ஆபாச இணையதளத்தை பார்த்தால் செல்போன்...