பெரம்பலூர்,டிச.22: பெரம்பலூர் சாரண சாரணியர் இயக்கத்தின் குருளையர் மற்றும் நீல பறவையர் அடிப்படை பயிற்சி முகாமில் ஆசிரியர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பில் நடைபெற்று வரும் குருளையர் மற்றும் நீல பறவையர் அடிப்படை பயிற்சி முகாமில் ஆற்றுங்கரங்கள் அமைப்பின் சார்பில் ஆசிரியர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்திய செஞ்சிலுவைச் சங்க பெரம்பலூர் கிளை யின் கௌரவச் செயலாளர் மற்றும் ஆற்றுங்கரங்கள் அமைப்பின் தலைவரான ஜெயராமன் தலைமையில் மகேஷ் குமரன், அருண் ஆபிரகாம் மற்றும் செவிலியர் அபிராமி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு முகமூடி தயாரித்தல் மற்றும் கைவினைத்திறன் குறித்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டக்கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கலாராணி இந்தப் பயிற்சி களைம் பார்வையிட்டு ஆசிரிய ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். முதலுதவிப் பயிற்சி பெற்ற வர்களுக்கு ஆற்றுங்கரங்கள் அமைப்பின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
The post பெரம்பலூரில் ஆசிரியர்களுக்கு முதலுதவி பயிற்சி appeared first on Dinakaran.