×

பெத்தநாயக்கன்பாளையத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம், மே 28: பெத்தநாயக்கன்பாளையத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 31ம் தேதி நடக்கிறது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட திட்டக்குழு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 31ம் தேதி பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.

இதில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 10,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

அன்று காலை 8 மணிமுதல் மாலை 3 மணிவரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0427-2401750 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post பெத்தநாயக்கன்பாளையத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Pettanayakkanpalayam ,Salem ,District Collector ,Brindadevi ,District Planning Committee ,Dinakaran ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்