புழல் : செங்குன்றம், சோத்துப்பாக்கம் சாலையில் உள்ள ஓட்டலில் 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இவர்கள் ஓட்டலின் மொட்டை மாடி குடிசையில் தங்கியுள்ளனர். நேற்று காலை இந்த குடிசையில் தீவிபத்து ஏற்பட்டது. செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
* பாரிமுனை என்.எஸ்.சி போஸ் சாலையில் கேட்டாராம் (43) என்பவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்று காலை இவரது கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து, உயர் நீதிமன்றம், யானைக்கவுனி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் சில பொருட்கள் எரிந்து நாசமானது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
