×

பெண்களுக்கு உரிமை தொகை செப்.15ல் வழங்கப்படும்

 

வடலூர், ஜூன் 19: வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பிரதம மந்திரி வீடு கட்டும் பயனாளிகளுக்கு கடனுதவி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். கடலூர் எம்.எல்.ஏ. ஐயப்பன், எஸ்.பி. ராஜாராம், கூடுதல் கலெக்டர் மதுபாலன், மகளிர் திட்ட இயக்குனர் செந்தில் வடிவு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கி பேசினர். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டி முடிக்க கூடுதலாக ரூ.50 ஆயிரம் கடனுதவி வழங்கப்படுகிறது. இதனை பெற்று வீடுகட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். செப்டம்பர் மாதம் 15ம் தேதி தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என்றார்.

மாவட்ட கல்விக் குழு தலைவர் சிவக்குமார், வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர் சுப்புராயலு, நகர செயலர் தமிழ்செல்வன், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், துணைத்தலைவர் ராமர், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், வட்டாட்சியர் சுரேஷ்குமார், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் கோபி, முத்துபாண்டியன், சத்தியமூர்த்தி, கனகவள்ளி, வட்டார இயக்க மேலாளர் சத்தியநாதன் மற்றும்நகர மன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post பெண்களுக்கு உரிமை தொகை செப்.15ல் வழங்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Vadalur ,Vadalur Private Marriage Hall ,Cuddalore District Rural Development and Panchayat Department ,
× RELATED வடலூர் வள்ளலார் பெருவெளி சைட் ‘பி’யில் மருத்துவமனை கட்ட ஐகோர்ட் அனுமதி!!