×

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை: விஜயகாந்த் அறிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: கோவை, திருப்பூர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க அரசு தவறி விட்டதோ என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அதே சமயம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனிமேல் நடைபெறா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு முழு கவனம் செலுத்தி, பெட்ரோல் குண்டு வீச்சு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டித்து தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை உடனடியாக நிலைநிறுத்த வேண்டும். …

The post பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை: விஜயகாந்த் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Chennai ,DMUDIK ,President ,Tamil Nadu ,Coimbatore ,Tirupur ,Ramanathapuram ,Dindigul ,Madurai ,Kanyakumari ,
× RELATED ஏஐ மூலம் இளமை தோற்றத்துக்கு மாறிய ஜாக்கிசான்