×

பெங்களூரில் இறந்தவர் உடலை வாணியம்பாடி அருகே மலைகிராமத்துக்கு டோலியில் கட்டி 7 கி.மீ. தூக்கி சென்ற மக்கள் : சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்

திருப்பத்தூர்: பெங்களூரில் இறந்த ஓட்டல் உரிமையாளர் உடலை வாணியம்பாடி அருகே மலைவாழ் மக்கள் டோலி கட்டி 7 கி.மீ தூரம் தூக்கிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலை கிராமத்தில் வசித்து வரும் மக்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, சாலை வசதி வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் மனு வழங்கியும் செய்து தரப்படவில்லை. மருத்துவமனை, நியாயவிலை கடை, மளிகை பொருட்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு சென்றுவர, காட்டுப் பாதையையே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு, மலை கிராம மக்கள் தற்காலிக மண் சாலையை அமைத்தனர். இந்த மண் சாலை மழை காலங்களில் சேதமடைந்து விடுகிறது. இந்நிலையில், பெங்களூரு பகுதியில் ஓட்டல் நடத்தி வந்த மலை கிராமத்தை சேர்ந்த சரவணன் (50) என்பவர் சிறுநீரக தொற்று காரணமாக நேற்று அங்கு உயிரிழந்ததார். அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். இதற்காக ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக தற்காலிக மண் சாலை சேதம் அடைந்ததால், ஆம்புலன்ஸ் மலை அடிவாரத்திலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் சரவணனின் சடலத்தை உறவினர்கள் டோலி கட்டி சுமார் 7 கிலோ மீட்டர் தூரம், தூக்கி சென்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, வாணியம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post பெங்களூரில் இறந்தவர் உடலை வாணியம்பாடி அருகே மலைகிராமத்துக்கு டோலியில் கட்டி 7 கி.மீ. தூக்கி சென்ற மக்கள் : சமூகவலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Vaniyambadi ,Tirupattur ,Vaniyampadi ,
× RELATED கர்நாடக மாநிலம் பெல்லாரியில்...