×

பூக்கள் விலை உயர வாய்ப்பு கோவையில் கொரோனா கண்காணிப்பு தீவிரம்

கோவை, டிச. 21: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், கண்காணிப்பு பணியை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் புதிய வகை ஒமிக்ரான் ஜேஎன்1 கொரோனா கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. மேலும், கடந்த மாதம் முதல் கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இரண்டு மாதங்களில் 10 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் தினமும் 15 பேர் வரை தொற்று ஏற்பட்டு வருகிறது. சென்னை, கோவை, செங்கல்பட்டு, ஈரோடு, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவாரூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. இதில், சென்னை, கோவை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில், மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் முகாம்கள் நடத்தி கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது: மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில் 36 குழுக்கள் மூலமாகவும், நகர் பகுதியில் 4 குழுக்கள் மூலமாகவும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமின்போது கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் கண்டறிந்தால் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றனர். தவிர விமான நிலையத்திலும் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. தற்போது வரை விமானம் மூலம் கோவை வந்தவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. கொரோனா கண்டறியப்பட்டவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு புதிய வகை தொற்று ஏற்பட்டு உள்ளதா? என கண்டறிய மாதிரிகள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் முககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். இதனால், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பூக்கள் விலை உயர வாய்ப்பு கோவையில் கொரோனா கண்காணிப்பு தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dinakaran ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!