×

புதிதாக குடிநீர் தொட்டி கட்டப்படும் ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

 

மதுரை, அக்.31: ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலந்தர் ஆசிக் அகமது, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு தினசரி 4 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குவதற்காக 4 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. இவை கடந்த 1998ல் கட்டப்பட்டவை. மிகவும் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே, இவற்றை இடித்துவிட்டு புதிய மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கட்டுமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, பாழடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை விரைவில் இடித்துவிட்டு, புதிய நீர்தேக்க தொட்டிகள் கட்டப்படவுள்ளன என்றார். இதையடுத்து நீதிபதிகள், அரசுத் தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.1க்கு தள்ளி வைத்தனர்.

The post புதிதாக குடிநீர் தொட்டி கட்டப்படும் ஐகோர்ட் கிளையில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Icourt ,Madurai ,Kalantar Asiq Ahmed ,Ramanathapuram ,RS Mangalam ,
× RELATED மறுகூட்டல் விண்ணப்பம்..அரசு வழங்கும்...