×

புகைப்படத்தை பயன்படுத்தி போலி வாட்ஸ்அப் தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்

அரியலூர், நவ.29: புகைப்படத்தை பயன்படுத்தி போலி வாட்ஸ்அப் தகவல் வந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
அரியலூர் மாவட்ட கலெக்டர் தன்னுடைய அலுவல் சார்ந்த பணிகளுக்கு அரசின் தொலைபேசி எண்ணையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், முகம் தெரியாத நபர்களிடமிருந்து மாவட்ட கலெக்டரின் புகைப்படத்தை முகப்புத்தோற்றமாக வைத்த +998902451950 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து வாட்ஸ்அப் கால் மூலமாகவும், வாட்ஸ்அப் மெசேஜ் மூலமாகவும் அரசு உயர் அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் பெயரில் வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொள்வதாக தகவல்கள் வரப்பெற்றுள்ளது.

இவ்வாறான பொய்யான அழைப்புகளை மேலே குறிப்பிட்ட எண் அல்லது வேறு எண்ணிலிருந்து வந்தால் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் ஏற்கவோ, பதிலளிக்கவோ வேண்டாம். மேலும் மேற்கண்ட எண்களிலிருந்தோ அல்லது வேறு எண்ணிலிருந்தோ ஏதேனும் இதுபோன்ற பொய்யான அழைப்புகள் வந்தால் உடனடியாக அரியலூர் மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் இதன் மூலம் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

The post புகைப்படத்தை பயன்படுத்தி போலி வாட்ஸ்அப் தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,Ariyalur ,Ariyalur District Collector ,Dinakaran ,
× RELATED போதை தவிர் கல்வியால் நிமிர்...