×

பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு

போச்சம்பள்ளி, ஜூன் 22: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கிறது. மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. தமிழக அரசின் தடையை தொடர்ந்து, அதன் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகளில், உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டது. இந்த நிலையில், மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, மத்தூர், பர்கூர், அரசம்பட்டி, வேலம்பட்டி, சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டல், டீ கடைகள், கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Bochampalli ,Krishnagiri district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தகாத உறவை கண்டித்ததால்...